தமிழ்நாடு

2023-24-ல் ஐ.டி. நிறுவன ஆள் சேர்ப்பு 20% குறையும்!

5th Oct 2022 06:58 PM

ADVERTISEMENT

2023-24-ம் ஆண்டில் புதிய ஊழியர் சேர்க்கையை 20% குறைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியாவில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார பின்னடைவை எதிர்பார்த்து புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தவதை ஐ.டி. நிறுவனங்கள் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணினி மென்பொருள்களுக்கான சந்தை இந்த ஆண்டு சிறப்பாக உள்ளபோதிலும் பணியாளர்கள் விலகல் அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் 50,000 பேரை பணியில் சேர்க்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் விப்ரோ 30,000 பேரையும், டி.சி.எஸ் புதிதாக 40,000 பேரையும் பணிக்கு அமர்த்த உள்ளன. எச்.சி.எல். டெக்னாலஜீஸ் இவ்வாண்டு 45,000 பேரையும், டெக் மகேந்திரா நிறுவனம் 15,000 பேரையும் பணிக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?


எனினும் 2023-24 நிதி ஆண்டில், இவ்வாண்டைவிட 20% குறைவாக புதிய பணியாளர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT