தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்து வழிப்பறி முயற்சி

5th Oct 2022 02:12 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது அவரது முகத்தில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்த மர்மநபர்கள் வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.

அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட மர்ம நபர்கள் தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து வழிப்பறி செய்யும்  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT