தமிழ்நாடு

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5th Oct 2022 09:49 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் புதன்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று புதன்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 

வரும் 7, 8 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க | திருமணத்தில் இருந்து திரும்பிய பேருந்து விபத்து: 25 பேர் பலி

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்ம் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை, ஆனைப்பாளையத்தில் 2 செ.மீ, வேடசந்தூர், சித்தூர், காங்கேயத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT