தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

5th Oct 2022 12:01 PM

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த திரு.சார்லஸ் (வயது 38), திரு.பிருத்விராஜ் (வயது 36), திரு.தாவீதுராஜா (வயது 30), திரு.பிரவீன்ராஜ் (வயது 19), திரு.ஈசாக் (வயது 19) மற்றும் செல்வன். அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எலான் மஸ்க் எடுத்த முடிவால் டிவிட்டருக்கு ஏற்பட்ட நிலை?

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாவும்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT