தமிழ்நாடு

பந்தல்குடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி 10ம் நாள் தசரா வழிபாடு

5th Oct 2022 09:34 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே ஸ்டார் நீச்சல்குளத்தை அடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் நவரதாத்திரி விஜயதசமி விழா மற்றும் ஸ்ரீசீரடி சாய்பாபாவின் 104வது முக்திநாளைமுன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

நவராத்திரி விழாவை முன்னிட்டு பந்தல்குடி  செட்டிபட்டி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு கொலு அமைத்து, அவற்றுக்கு வண்ண வண்ண விளக்குகள் அலங்காரம் அமைத்து ஒவ்வொருநாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்படி 10ஆம் நாளான விஜயதசமியை முன்னிட்டும் சரஸ்வதி, துர்கை, லட்சுமி ஆகிய 3 அம்பிகைகளின் ஒருங்கிணைத்த வழிபாடு காலை 9 முதல் நடைபெற்றது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதையடுத்து பாபாவின் விக்கிரகத்திற்கு (உற்சவர்) அபிஷேகம் மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது பாபாவின் 104 வது நினைவு நாளைக் குறிப்பிட்டு அட்டைகளில்  எழுதப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

ADVERTISEMENT
ADVERTISEMENT