தமிழ்நாடு

பெரியாற்றில் வீசப்பட்ட இளைஞர் உடலை தேட 15 நாள்களுக்குப் பின் தண்ணீர் நிறுத்தம்!

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி கொலை செய்து பெரியாற்றில் வீசப்பட்ட இளைஞர் உடலை 15 நாள்களுக்குப் பிறகு, தண்ணீரை நிறுத்தி மீட்புப் படையினர் புதன்கிழமை தேட தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்கு தெருவைச் சேர்ந்தவர் பொம்மையன் மகன் பிரகாஷ் (34), இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி நித்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வினோத்குமார் அவரது மனைவி நித்யா மற்றும் நண்பர் ரமேஷ் ஆகிய 3 பேரும், செப்.21 ஆம் தேதி பிரகாஷை, வீட்டில் வைத்து கொலை செய்து சாக்கில் மூட்டையாக கட்டி அனுமந்தன்பட்டி உத்தமபாளையத்திற்கிடையே உள்ள புறவழிச்சாலை பெரியாற்றில் வீசியதாக கூறினர். 

கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் செப்.24 ஆம் தேதி கைது செய்தனர், உடலை பெரியாற்றில் தேட முடிவு செய்தனர், அப்போது 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நிறுத்த முடியவில்லை. 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவின் பேரில், புதன்கிழமை முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் காலையில் நிறுத்தப்பட்டது.

கம்பம் தெற்கு காவல் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உத்தமபாளையத்திலிருந்து வைகை அணை வரை பெரியாற்றில் உள்ள தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT