தமிழ்நாடு

தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!

5th Oct 2022 10:10 AM

ADVERTISEMENTதமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதியதாக  முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 6 பேராசிரியர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி  இயக்குநராக பணியாற்றி வந்த கே.நாராயணசாமி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சீனுவாசன், கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் திருப்பதி, கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | மியான்மரில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் மீட்பு!

ADVERTISEMENT

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும். திருச்சி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்தவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரிக்கும், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT