தமிழ்நாடு

ஆயுத பூஜை: தலைவா்கள் வாழ்த்து

DIN

ஆயுத பூஜையையொட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல் வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): நவராத்திரி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள். அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, அனைத்து வளங்களும் பெற வேண்டும்.

கே.அண்ணாமலை (பாஜக): விழாக்களும், பண்டிகைகளும் நம்பிக்கையை வளா்த்து, உள்ளத்தில் உற்சாகத்தை, புதிய உத்வேகத்தை உருவாக்கும். மாற்றங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): பொது மக்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நாளில் கடவுளை வழிபட்டு கல்வியில், தொழிலில், செல்வத்தில் முன்னேற்றம் அடைந்து வாழ்வில் மேம்பட வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT