தமிழ்நாடு

விஐடியில் ரோபோ கொண்டாடிய ஆயுத பூஜை! (விடியோ)

4th Oct 2022 08:59 PM

ADVERTISEMENT

 

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் பொருள்களை சுத்தப்படுத்தி படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். 

படிக்க விபத்துகள் நடக்கக் கூடாது! தண்டவாளத்திற்கு பூஜை செய்து வழிபட்ட ஊழியர்கள்

ADVERTISEMENT

அந்தவகையில் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. எனினும் இதில் சிறப்பம்சமாக மாணவர்கள் தயாரித்த ரோபோ மூலம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. சரஸ்வதி படத்திற்கு ரோபோ கற்பூரம் காட்டி தீபாராதனை காட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

ரோபோ கொண்டாடும் ஆயுத பூஜை: விடியோ

ADVERTISEMENT
ADVERTISEMENT