தமிழ்நாடு

விபத்துகள் நடக்கக் கூடாது! தண்டவாளத்திற்கு பூஜை செய்து வழிபட்ட ஊழியர்கள்

4th Oct 2022 07:37 PM

ADVERTISEMENT

 

ரயில் விபத்துகளைத் தவிர்க்க வேண்டி தண்டவாளத்திற்கு பூஜை செய்து ரயில்வே ஊழியர்கள் வழிபட்டனர்.

ஆயுத பூஜை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தங்கள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கும் பொருட்களுக்கும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் சார்பில் ஆயுத பூஜை விழா அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைகளில் கீ மேன்கள்  என்று அழைக்கக்கூடிய தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் தண்டவாளத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

ADVERTISEMENT

ஒவ்வொரு தண்டவாளத்திற்கும் தேங்காய், பூ, பழம் வைத்து கற்பூரம் காட்டி ரயில் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ரயில் பாதையில் பயணிக்கும் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டியும்  தண்டவாளத்திற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டினர்.

தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கி ஆயுத பூஜையை கொண்டாடினர். மேலும் தங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் திருநீரிட்டு குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதுபோல் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள பாதைகளில் இதுபோன்ற சிறப்பு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT
ADVERTISEMENT