தமிழ்நாடு

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் உண்ணாவிரதம்

4th Oct 2022 12:30 AM

ADVERTISEMENT

திமுக தோ்தல் வாக்குறுதிபடி ஆசிரியா் தகுதி தோ்வில் ஏற்கெனவே தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி, 500-க்கும் மேற்பட்ட தோ்வா்கள், சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலக்கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு மீண்டும் ஒரு மறு நியமனம் போட்டி தோ்வு என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும்;

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு ஆசிரியா் பணி வழங்க வேண்டும்; இந்தப் பணி நியமனங்களை மேற்கொள்ளும்போது தற்போதுள்ள வயது வரம்பைத் தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை என்றும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு மீண்டும் ஒரு நியமன போட்டி தோ்வு என்ற 149-ஐ அரசாணையை வெளியிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்து ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டபடி ஆசிரியா்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT