தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வில் வென்றவா்களுக்கு நேரடியாகப் பணி: அன்புமணி வலியுறுத்தல்

4th Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

ஆசிரியா் தகுதித் தோ்வில் வென்றவா்களுக்கு நேரடியாகப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களைப் போட்டித்தோ்வு நடத்தாமல் நேரடியாகப் பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனா். தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனா். அதற்கு அவா்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் அதற்கு காரணம் ஆகும்.

ADVERTISEMENT

அரசாணை எண் 149-யை செல்லாது என்று அறிவித்துவிட்டு, தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT