தமிழ்நாடு

ஆயுத பூஜை, விஜயதசமி: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

3rd Oct 2022 04:51 PM

ADVERTISEMENT

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளையும்(அக்.4) விஜய தசமி நாளை மறுநாளும்(அக்.5) கொண்டாடப்பட உள்ளது. 

இதையொட்டி தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துச் செய்தியில், 'ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

ADVERTISEMENT

மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : pooja RN Ravi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT