தமிழ்நாடு

டெட் தேர்வில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: மநீம

3rd Oct 2022 03:45 PM

ADVERTISEMENT

 

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

2013, 2014, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெட்(TET) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்குப் பணி வழங்கக்கோரியும், தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்தும் முறையை ரத்துசெய்யக்கோரியும் டெட் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களின் நலக்கூட்டமைப்பினர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

படிக்க: இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

சமுதாயத்தைச் சீரமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஒழுக்கமும், சிறந்த கல்வித் தகுதியும் கொண்டதாக இளைய சமுதாயத்தை செதுக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க இயலாது. 

ADVERTISEMENT

கரோனா காலகட்டத்திற்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டும், தமிழகமெங்கும் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பும் விதமாகவும், கடினமான தகுதித்தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சிபெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகிடைக்காதவர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டும் தமிழக அரசானது ஆசிரியர் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, படிப்படியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT