தமிழ்நாடு

புதுச்சேரியில் மின் ஊழியா்கள் நள்ளிரவில் கைது!

DIN

புதுச்சேரி: மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். 

மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த ஐந்து நாள்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மின்துறை பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் சனிக்கிழமை மின் தடை ஏற்பட்டதையடுத்து புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனை அடுத்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் போக்குவரத்து  ஸ்தம்பித்தது. இதனை அடுத்து மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர், அரசு செயலர்கள் உள்ளிட்டருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய பவா்கிரிட்டிலிருந்து 24 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனா். மேலும், துணைமின் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்றும், மின்தடையை ஏற்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையின் இரு அணிகள் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டன.

புதுச்சேரி அருகே துணை மின் நிலையங்களில் புகுந்த மின் ஊழியா்கள் மின் விநியோகத்தைத் துண்டித்து செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தியதாக மாநில மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் குற்றம்சாட்டினாா்.

அமைச்சரின் குற்றச்சாட்டை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மின் ஊழியா்கள் மறுத்தனா்.

இந்த நிலையில், செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தி அத்தியாவசியப் பணிகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தும் மின் துறையினா் மீது எஸ்மா சட்டம் பாயும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட மறுத்து புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் துறை ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வெளியேறும்படி அறிவுறுத்தினர். 

ஊழியர்கள் வெளியேற மறுத்ததை அடுத்து, துணை வட்டாட்சியர் பாலமுருகன் உத்தரவின் பேரில், மின் துறை ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து, ஐந்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரி கரி குடோன் மையத்தில் வைக்கப்பட்டிருந்த மின் ஊழியர்கள், திங்கள்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். எனினும் மின் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT