தமிழ்நாடு

காஞ்சிபுரம்: எரிவாயு உருளைகள் குடோனில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

3rd Oct 2022 05:56 PM

ADVERTISEMENT

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வாயுக்கசிவு ஏற்பட்டு உருளைகள் வெடித்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் 3 பேர் உயிரிழந்திருப்பது உள்பட பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கத்தில் அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் சாந்திக்கு சொந்தமான எரிவாயு உருளைகள் கிடங்கு இருந்து வந்தது.தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இக்கிடங்கில் கடந்த 28.9.22ஆம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டு உருளைகள் வெடித்துச் சிதறின.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில் 6 ஆண்கள்,5 பெண்கள் ஒரு சிறுவர் உள்பட மொத்தம் 12 பேர் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர். சம்பவத்தில் தொடர்புடைய கிடங்கு அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

படிக்க: கேப்டனின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

இச்சம்பவம் தொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கடலூரைச் சேர்ந்த ஆமோத்குமார்(26) ஜீவானந்தம்(46)இவரது மகள் சந்தியா(21) கும்பகோணத்தைச் சேர்ந்த குணாளன்(22)ஆகிய 4 பேர் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர். 

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கத்தை சேர்ந்த கோகுல்(22)சண்முகப்பிரியன்(17)கிஷோர்(22)ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலி எண்ணிக்கை இதுவரை 7 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT