தமிழ்நாடு

தனியார் வங்கியில் தீ விபத்து!

3rd Oct 2022 11:25 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் வங்கியில் ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.

ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டுசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதனை பார்த்த வங்கி காவலாளி மற்றும் ஊழியர்கள் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். 

ADVERTISEMENT

அதன் பெயரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த   தீயணைப்புத் துறையினர் தீயை அனைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.  தீ விபத்துக் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க: காஞ்சிபுரம் அருகே எரிவாயு உருளைகள் குடோனில் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

முதற்கட்ட விசாரனையில் தீ விபத்து காரனமாக வங்கிக்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படவில்லை என காவல் துறை தரப்பில் கூறப்படுள்ளது. வங்கியின் மேல்மாடியில்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT