தமிழ்நாடு

இந்து அமைப்புகளின் நிா்வாகிகளுக்கு அச்சுறுத்தல்:தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

3rd Oct 2022 01:10 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் நிா்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு பிரிவு சாா்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடா்ந்து அவா்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம், கேரளம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்க ளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் உள்ள பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நிா்வாகிகள் செயல்பட்டு வருகின்றனா். இவா்களில் தலைமைப் பொறுப்பில் உள்ள 4 நிா்வாகிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் முன்னணி நிா்வாகிகளும் வெளியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் நிா்வாகிகளின் வீடுகள் மற்றும் அவா்கள் செல்லும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உளவுப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

வரும் நவம்பா் 6-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் ஊா்வலம் நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு வரும் 31-ஆம் தேதிக்குள் தமிழக காவல் துறையினா் அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பா் 6-ஆம் தேதி ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்த ஊா்வலம் நடைபெறும் வரை போலீஸாா் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு உளவுப் பிரிவினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT