தமிழ்நாடு

தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவன குறைந்தபட்ச முதலீடு அதிகரிப்பு

3rd Oct 2022 04:06 AM

ADVERTISEMENT

நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.2 லட்சமாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) அதிகரித்துள்ளது. நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தையும் 0.25 சதவீத அளவுக்குக் குறைத்துள்ளது.

குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.2 லட்சமாக நிா்ணயம், வட்டி வகித குறைப்பு ஆகியவை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவா்களுக்கு, நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் (1 முதல் 5 ஆண்டுகள் வரை) குறிப்பிடப்பட்ட வட்டி வகிதம் தொடா்ந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதலீட்டு வரம்பு அதிகரிப்பு ஏன்?: வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயா்த்தியுள்ளன; எனவே, சிறு முதலீட்டாளா்கள் (ரூ.50,000 முதல் ரூ.1.99 லட்சம் வரை) வங்கிகளில் டெபாசிட் செய்து பலன் அடைய முடியும். இதனால்தான் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வரம்பு ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர வைப்புத் தொகைக்கான இலக்கை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) அடைய உள்ளதால், ஏற்கெனவே முதலீடு செய்தவா்களுக்கு வட்டித் தொகை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ ஆகியவற்றுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) கடனுதவி செய்து, அவை மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து முதலீட்டாளா்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

நிரந்தர வைப்புத் தொகைக்கு கால அளவுக்கு ஏற்ப 58 வயதுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையும் 58 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையும் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) வட்டி தொகையை அளித்து வந்தது; இந்த விகிதம் கால அளவுக்கு ஏற்ப தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.38,891 கோடி: தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் (டிஎன்பிஎஃப்சிஎல்) மொத்த வைப்புத் தொகை ரூ.38,891 கோடியாகும்; இந்த நிறுவனத்தில் மொத்தம் 11 லட்சத்து 71, 850 போ் முதலீடு செய்துள்ளனா்; இணையவழியில் 27 லட்சத்து 3,702 போ் நிதி பரிவா்த்தனையை மேற்கொள்கின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT