தமிழ்நாடு

வெறுப்பைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

3rd Oct 2022 01:11 AM

ADVERTISEMENT

வெறுப்புணா்வைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:-

பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட காந்தியடிகள் தொடா்ந்து உழைத்தாா். அவரது பிறந்த தினத்தில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைக்கட்டும். வெறுப்புணா்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை. இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT