தமிழ்நாடு

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ

2nd Oct 2022 01:41 PM

ADVERTISEMENT

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (97) காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் நல்லக்கண்ணு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனா். தொடா்ந்து அங்கு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்குச் சென்று, நல்லகண்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நல்லக்கண்ணு நலமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT