தமிழ்நாடு

டாஸ்மாக் செல்லும் வழி! கவனம் ஈர்க்கும் அறிவிப்பு பலகை

2nd Oct 2022 12:07 PM

ADVERTISEMENT

 

வேளச்சேரியில் அரசு மதுபானக் கடைக்குச் செல்லும் வழி என வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை கவனம் ஈர்த்துள்ளது. 

அரசு சார்பில் நெடுஞ்சாலைத் துறையில் பொதுமக்கள் அல்லது பயணிகளை வழிநடத்துவதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.

படிக்க பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து! (விடியோ)

ADVERTISEMENT

நகராட்சி, மாநகராட்சி போன்று உள்ளூர் நிர்வாகங்களின் சார்பிலும் நகர், தெரு போன்ற அறிவிப்பு பலகைகளும், குறிப்பிட்ட அரசுக் கட்டடங்களை சுட்டிக்காட்டும் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படும். 

அதேபோன்று தற்போது அரசு மதுபானக் கடைக்கு செல்லும் வழி என அறிவிப்பு பலகை கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

வேளச்சேரியில் எடுத்த இந்த புகைப்படத்தில், அரசு மதுபானக் கடைக்கு செல்லும் வழி என அம்புக்குறியுடன் பதாகை இடம் பெற்றுள்ளது. 

அறிவிப்பு பலகை வைத்து குடிமக்களை வியாபரம் செய்ய அழைப்பதாக இதனைப் பார்ப்பவர்கள் கருத்துக்களை தெரிவித்துவிட்டுச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT