தமிழ்நாடு

வெறுப்பைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை: மு.க.ஸ்டாலின்

2nd Oct 2022 09:56 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஆக.2) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்திலுள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், 
பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT