தமிழ்நாடு

நடிகர் சங்கத்திலிருந்து கே.பாக்யராஜ் நீக்கம் ஏன்?

1st Oct 2022 03:00 PM

ADVERTISEMENT

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 மாத காலத்துக்கு நடிகர் கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோரை நடிகர் சங்கத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கத்தை பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் கே.பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார். 

2019 நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. நடிகர் சங்க தேர்தலை நடத்தக்கூடாது என பல குழப்பங்கள் அந்த தேர்தலில் நிலவியது. இருந்தபோதிலும் 2019 ஜூனில் தேர்தல் நடந்தது.

நடிகர் சங்க தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டதால், இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. கடந்த மார்ச் மாதம் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி என்ணப்பட்டன.

ADVERTISEMENT

தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றனர்.

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகம், தேர்தல் பற்றி பொய்யான கருத்துகளை பரப்பி வருவதாக ஆகஸ்டில் கே.பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பினர். கடிதம் மூலம் உண்மைக்கு மாறான கருத்துகளை பரப்பியதாக கே.பாக்யராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கே.பாக்யராஜுக்கு கடிதம் எழுதினர். அதில், 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 22-ல் கடிதம் அனுப்பப்பட்டது.

நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. சங்கத்துக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ கருத்து கூறக்கூடாது என விதி உள்ளது.

சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று கே.பாக்யராஜ் தலைவரானர்.

இதையும் படிக்க: அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார் எலான் மஸ்க்! 

இந்நிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT