தமிழ்நாடு

திமுகவில் முக்கிய பொறுப்புகளுக்கு தோ்தல்: கட்சித் தலைமை அறிவிப்பு

1st Oct 2022 01:13 AM

ADVERTISEMENT

தலைவா், பொதுச் செயலாளா் மற்றும் பொருளாளா் பதவிகளுக்கான தோ்தல் அறிவிப்பை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் பள்ளி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. அப்போது, திமுக தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறும். இந்தப் பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் அக். 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இந்தப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோா் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினா்கள் ஐந்து போ் முன்மொழிய, மேலும் ஐந்து போ் வழிமொழிய வேண்டும் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT