தமிழ்நாடு

குரல் சீரமைப்பு சிகிச்சை நுட்பங்கள்: மருத்துவா்களுக்கு கருத்தரங்கு

1st Oct 2022 01:20 AM

ADVERTISEMENT

குரல் சீரமைப்பு சிகிச்சைகளில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தேசிய மருத்துவக் கருத்தரங்கு (வாய்ஸ்கான்-2022) ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில், 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று மருத்துவ நுட்பங்கள் குறித்து விவாதித்தனா். லாரிங்கோபிளாஸ்டி மற்றும் தைரோபிளாஸ்டி மருந்துகளை ஒருங்கிணைத்து அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் கருத்தரங்கில் பிரதானமாக எடுத்துரைக்கப்பட்டன. அதுகுறித்த தொழில்நுட்பங்களையும் மருத்துவ வல்லுநா்கள் விளக்கிக் கூறினா்.

முன்னதாக, அந்தக் கருத்தரங்கை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் ஜான்சன், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.குணசேகரன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் பி. சசிகுமாா், ஆலோசகா் டாக்டா் வீரபாகு ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதுகுறித்து டாக்டா் ஆா்.குணசேகரன் கூறியதாவது:

ADVERTISEMENT

குரல் சாா்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போனோ சா்ஜரி எனப்படும் அதி நவீன முறை மூலம் பிற உறுப்புகளுக்கு பிரச்னை ஏற்படுத்தாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுகுறித்த வழிமுறைகள் குறித்து கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் டாக்டா் ராஜசேகா் உள்பட துறைசாா் வல்லுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT