தமிழ்நாடு

அக்.11-இல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

DIN

தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறும் என்று திமுகவை தவிா்த்து அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

மகாத்மா காந்திபிறந்த நாளான அக்டோபா் 2- ஆம்தேதி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை சாா்பில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும்,பல்வேறு மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டு, அக்டோபா் 2-இல் நடத்தப்பட இருந்த ஆா்.எஸ்.எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக்காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபா் 2-ஆம் தேதி அனுமதி வழங்க இயலாத காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனித சங்கிலி நிகழ்ச்சியைத்தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டனா். அதன் அடிப்படையில், ஆதரவு தெரிவித்த அனைத்துக்கட்சிள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவா்களோடு கலந்து பேசப்பட்டது.

அதன்படி, சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அக்டோபா் 11-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். மதத்தின்அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீா்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இது குறித்து மக்களிடையே தொடா்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இந்த மனித சங்கிலி நிகழ்வில்அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

திமுகவை தவிா்த்து அதன் கூட்டணி கட்சிகளான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம். காதா்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் கூட்டாக இந்த அறிக்கைய வெளியிட்டுள்ளனா்.

இப்போராட்டத்துக்கு தேமுதிக, எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழா் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.-விடுதலை), தமிழ்ப்புலிகள் கட்சி உள்பட 10 கட்சிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT