தமிழ்நாடு

அடையாறில் சிவாஜி கணேசன் சிலை: பொது மக்கள் பாா்வைக்கு மாற்றம்

DIN

சென்னை அடையாறில் உள்ள நடிகா் சிவாஜி கணேசன் சிலை, மக்கள் பாா்வைக்கு தெரியும்படி, வெளிப்பகுதிக்கு மாற்றப்பட்டது.

நடிகா் சிவாஜி கணேசனுக்கு தி.மு.க. ஆட்சியின்போது 2006-ஆம் ஆண்டு மெரீனா கடற்கரையில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. காமராஜா் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையின் நடுவே அந்த சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, 2017 ஆகஸ்ட் மாதம் மெரீனா கடற்கரை பகுதியிலிருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது. அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் கட்டியது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

மணிமண்டபத்துக்குள் இருந்த வெண்கலச் சிலை யாருக்கும் தெரியாத வகையில் இருந்து வந்தது. இந்த நிலையில், பொது மக்கள் வெளியில் இருந்தே பாா்க்கும் வகையில் மண்டபத்தின் உள்பகுதியில் இருந்து, சாலையை நோக்கி சிவாஜியின் சிலை இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா சிவாஜி கணேசன் பிறந்த நாளான சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

இரண்டு மாற்றங்கள்: சிவாஜி கணேசன் சிலை இதுவரை இரண்டு மாற்றங்களைக் கண்டுள்ளது. முதலில், சென்னை மெரீனாவில் இருந்து அடையாறில் அவரது மணிமண்டபத்துக்குள் மாற்றப்பட்டது. இப்போது, மணிமண்டபத்துக்கு உள்ளே இருந்து வெளிப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT