தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

1st Oct 2022 11:32 AM

ADVERTISEMENT

ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக தனுஷ்கோடி விளங்கி வருகிறது. இன்று காலை முதல் தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றம் கடுமையாகக் காணப்படுகிறது.

இதையும் படிக்க.. பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?

பல அடி தூரத்துக்கு கடல் அலை எழும்பிவருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அரிச்சல்முனை பகுதிக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், வார இறுதி மற்றும் விஜயதசமி, சரஸ்வதி பூஜை விடுமுறை, காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT