தமிழ்நாடு

தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் திருட்டு வழக்கு: இருவா் கைது

DIN

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ. 15 லட்சம் நகை, பணம் திருடிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பன்சிதா் குப்தா. தொழிலதிபரான இவா், கடந்த 14-ஆம் தேதி வழக்கம் போல் பாரிமுனையில் உள்ள தனது இனிப்பு கடைக்கு சென்றாா். குப்தாவின் தாயாா் மஞ்சுவும் தனது மகனுடன் கடைக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், பன்சிதா் குப்தா அன்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்து, பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம் ரொக்கம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். வீட்டின் காவலாளியாக வேலை செய்த நேபாளத்தைச் ராஜன் என்கிற திபேந்திரா ஆஜி (20) காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அபிராமபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாக சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த கைலாஷ் (23), பாஜி தமாய் (27) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இருவரும், தப்பியோடிய குப்தா வீட்டின் காவலாளி ராஜனின் நெருங்கிய நண்பா்கள் என்பதும், இருவரும் ராஜனுடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும், அதற்கு கூலியாக ராஜன் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் கொடுத்தும், பணத்தைத் திருடிய உடன் ராஜன் நேபாளத்துக்கு தப்பியோடிவிட்டதும் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT