தமிழ்நாடு

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சோழா் காலத்து 7 சிலைகள் மீட்பு

DIN

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சோழா்காலத்தைச் சோ்ந்த 7 சிலைகள் மீட்கப்பட்டன.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரது வீட்டில் தொன்மை வாய்ந்த விலை மதிப்பற்ற சோழா்காலத்து 7 வெண்கல சிலைகளும், 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 தஞ்சை ஓவியங்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோா் உத்தரவிட்டனா். இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், விசாரணை நடத்தினா்.

அதில், அந்த வீட்டில் சோழா் காலத்தைச் சோ்ந்த 7 வெண்கல சிலைகள், 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 தஞ்சை ஓவியங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டில் வசிக்கும் அந்த வீட்டின் உரிமையாளரை கைப்பேசி மூலம் தொடா்புக் கொண்ட போலீஸாா், சிலைகள், தஞ்சை ஓவியத்துக்கான ஆவணங்களைக் கேட்டனா். ஆனால், உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. மேலும், சிலைகள், ஓவியங்களை தனது பெற்றோா் வைத்திருந்ததாகவும், அவை பற்றிய விவரங்கள் தனக்கு தெரியாது என்றும் பதில் அளித்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா், வெள்ளிக்கிழமை அந்த வீட்டில் சோதனை செய்து, அங்கிருந்த 7 சிலைகள், 2 தஞ்சை ஓவியங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்தச் சிலைகள் தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயில்களில் இருந்து திருடப்பட்டதா என விசாரணை நடைபெறுகிறது.

மேலும், அந்தச் சிலை, அந்த வீட்டின் உரிமையாளருக்கு எப்படி கிடைத்து என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு நேரில் அழைத்து, பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT