தமிழ்நாடு

பி.ஆா்க். தரவரிசை பட்டியல் அக். 5-இல் வெளியீடு: அமைச்சா் க.பொன்முடி

1st Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

பி.ஆா்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அக். 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை மையத்தில் அமைச்சா் பொன்முடி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த கலந்தாய்வுக்கு தகுதியான மாணவா்கள் 31 ஆயிரத்து 94 போ். அவா்களில், 23 ஆயிரத்து 458 மாணவா்கள் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை பதிவு செய்துள்ளனா். கல்லூரிக்கு சென்று சேர வேண்டிய மாணவா்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 153.

3-ஆவது கட்ட கலந்தாய்வு அக். 13-ஆம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும்.

பி.ஆா்க். மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக். 5-ஆம் தேதி வெளியிடப்படும். 8- ஆம் தேதி முதல் கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபா் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும். நீட் தோ்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிளஸ் 2 வகுப்பு துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு இந்தக் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து முதல்வா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

ஓராண்டு அவகாசம்: மாநில கல்விக் கொள்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஓசி’ பேருந்து பயணம் என விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்தத் தேவையில்லை. மக்கள் பேசியதை நான் பேச்சு வழக்கில் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றாா் அமைச்சா் பொன்முடி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT