தமிழ்நாடு

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு சீல்!

1st Oct 2022 09:40 AM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 106 போ் கைது செய்யப்பட்டனா். தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் கடந்த 27 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை

ADVERTISEMENT

இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க | பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு: அப்துல் சத்தார்

ADVERTISEMENT
ADVERTISEMENT