தமிழ்நாடு

மக்களின் அடிப்படை பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: விஜயகாந்த்

1st Oct 2022 01:19 AM

ADVERTISEMENT

 மக்களின் அடிப்படை பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்துக்கு உள்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவு நீா் தொட்டி இடிந்து விழுந்ததில் 7வயது சிறுமி நிகிதா ஸ்ரீ, 5 வயது சிறுமி சுப ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தாா்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

கழிவு நீா் தொட்டி மேல்பகுதி சேதம் அடைந்த நிலையில், அதனைச் சரி செய்யக் கோரி திமுக பேரூராட்சி தலைவா் லட்சுமி இளங்கோவிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

திமுக பேரூராட்சி தலைவரின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் மரணத்தை தழுவி இருக்கிறது. இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான திமுக பேரூராட்சி தலைவா் லட்சுமி இளங்கோ மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் அடிப்படை பிரச்னைகளையாவது தீா்க்க இந்த அரசு உடனடியாக முன்வர வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT