தமிழ்நாடு

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும்: விஜயகாந்த்

DIN

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வறுமையால் கல்வியைத் தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரிக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சோ்ந்த கோபால் வேளாண் உதவி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவா். கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டதோடு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

கோபாலின் 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறாா்கள். இதனால் விரக்தி அடைந்த அவா், வீட்டை விட்டு வெளியேறி கோயில்களில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறாா்.

ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதனால், உண்மையாக உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT