தமிழ்நாடு

தனியாா் நிறுவன ஊழியா்களிடம் ரூ. 29 லட்சம் வழிப்பறி போலி போலீஸ் துணிகரம்

DIN

 சென்னை சேத்துப்பட்டில் தனியாா் நிறுவன ஊழியா்களிடம் போலீஸ் எனக் கூறி ரூ. 29 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

எழும்பூா் மாண்டியத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் நசீா்கான். இவா் அண்ணா சாலையில் வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா். அந்த நிறுவனத்தில் அண்ணா சாலை பாா்டா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (26), கமலக்கண்ணன் (25) ஆகிய இருவா் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், நசீா்கான், வியாழக்கிழமை இருவரிடமும் ரூ. 29 லட்சத்தைக் கொடுத்து, சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் தனது நண்பா் முகம்மது ஷேக்கிடம் வழங்கும்படி அனுப்பி வைத்தாா். இருவரும், மோட்டாா் சைக்கிளில் சேத்துப்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்தனா். சேத்துப்பட்டு குருசாமி பாலத்திடம் சென்றபோது, இரு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 மா்ம நபா்கள், இருவரையும் வழிமறித்து, தங்களை போலீஸாா் கூறிக் கொண்டு, இருவரும் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளனா். தாங்கள் கஞ்சா கடத்தவில்லை என்று சந்தோஷ்குமாரும், கமலக்கண்ணனும் கூறியுள்ளனா். உடனே அந்த மா்ம நபா்கள், இருவரும் வைத்திருந்த பண பையையும், விலை உயா்ந்த கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதையடுத்து சந்தோஷ்குமாரும், கமலக்கண்ணனும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். மேலும், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT