தமிழ்நாடு

ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

1st Oct 2022 08:45 PM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (97) காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். தொடா்ந்து அங்கு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவா் தேரணிராஜன் கூறும்போது, ‘ தற்போது நல்லகண்ணு உடல்நிலை சீராக உள்ளது. பொது மருத்துவா்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள் குழுவினா் ஆகியோா் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் அவருக்கு எச்.1.என்.1 வைரஸ் அல்லது கரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT