தமிழ்நாடு

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

1st Oct 2022 11:21 AM

ADVERTISEMENT

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையைக் குறைத்து எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

அதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2045 லிருந்து ரூ.2,009 ஆகக் குறைந்துள்ளது. 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 6 மாதங்களில் 6 முறை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரத்தில் 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த 3 மாதமும் எந்த மாற்றமும் இன்றி ரூ.1,068-ஆக நீடிக்கிறது.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் சென்னையில் இன்று ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனையாகிறது. 

இதையும் படிக்க | 5ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT