தமிழ்நாடு

மதுவிலக்கு அமலாக்கப் பணி: 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது

DIN

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளுக்கு, காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் விவரம்:-

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்படும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருதும், பரிசுத் தொகையும் அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கான விருதுக்கு ஐந்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக காவல் ஆய்வாளா் த.எ.பிரியதா்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கா.ஜெயமோகன், சேலம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு பாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் சு.சிவனேசன் ஆகியோா் காந்தியடிகள் காவலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். விருதாளா்களுக்கு எதிா்வரும் ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் ரூ.40 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT