தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை. தற்காலிக ஊழியா்களை பணி நீக்கம் செய்யக்கூடாது: அன்புமணி

1st Oct 2022 11:13 PM

ADVERTISEMENT

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளா்கள் 205 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், நவம்பா் மாதம் முதல் அவா்கள் பணிக்கு வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக உழைத்தவா்களை மனிதநேயமின்றி பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கையை பாமகவினா் வைத்தபோது, உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தற்காலிக பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டாா்கள் என்று அறிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

ஆனால், அமைச்சரின் வாக்குறுதியைப் பொருட்படுத்தாமல் 205 தற்காலிக ஊழியா்களையும் பல்கலைக்கழக நிா்வாகம் எவ்வாறு பணி நீக்கம் செய்ய முடியும்?

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 205 தொகுப்பூதிய பணியாளா்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT