தமிழ்நாடு

ராகிங் விவகாரத்தில் மேலும் மூவா் இடைநீக்கம்: உயா்நீதிமன்றத்தில் வேலூா் சிஎம்சி விளக்கம்

DIN

வேலூா் சி எம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மேலும் 3 மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி நிா்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு மாணவா்களை உள்ளாடையுடன் நடக்கவைத்து ராக்கிங் செய்ததாக புகாா் எழுந்தது.

இது தொடா்பான காணொலி காட்சி பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிா்வாகம் சம்பவத்தில் தொடா்புடைய 7 மாணவா்களை இடைநீக்கம் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும், அதன் பேரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கும்படி மருத்துவப் பல்கலை. பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே 7 மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது 3 மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகிங்கை முழுமையாகத் தடுக்கும் நோக்கத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎம்சி மருத்துவக் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT