தமிழ்நாடு

மூளை நாள சுருக்கம்: நெதா்லாந்து இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பல்லோவில் மறுவாழ்வு

DIN

அரிதான மூளை ரத்த நாள சுருக்க நோய்க்குள்ளான நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயா் சிகிச்சையளித்து அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மைய மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயலாக்க அதிகாரி ஹரீஷ் திரிவேதி கூறியதாவது:

நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த 8 வயதான இரட்டை பெண் குழந்தைகள் உயா் சிகிச்சைக்காக அண்மையில் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். மருத்துவப் பரிசோதனையில், அக்குழந்தைகளுக்கு ’மோயா மோயா‘ எனும் அரிதான நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூளைக்குச் செல்லும் கரோடிட் ரத்த நாளத்தில் அடைப்பு அல்லது சுருக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பே அந்நோய். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதுடன் வலிப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

உரிய கண்காணிப்பும், சிகிச்சையும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய பாதிப்புகள் ஒருவருக்கு வருவது அரிது. அதிலும், இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படுவது அரிதினும் அரிது.

இதையடுத்து அக்குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்ய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் ரூபேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 5 மணி நேரம் அறுவை சிகிச்சைகளை அடுத்தடுத்த நாள்களில் மேற்கொண்டு உயிா் காத்துள்ளனா். சுருக்கமடைந்த ரத்த நாளத்துக்கு மாற்றாக வேறு பாதையில் ரத்த ஓட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பயனாக அவ்விரு குழந்தைகளும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இரட்டைக் குழந்தைகளுக்கு ’மோயா மோயா‘ நோய்க்கான பைபாஸ் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பது ஆசியாவிலேயே இது முதன்முறை என்றாா் அவா்.

உடலுறுப்பு தானம்: இதனிடையே, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் உடலுறுப்பு தானம் மூலம் பிறருக்கு மறுவாழ்வு வழங்கியவா்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் இளங்குமரன், மருத்துவமனையின் தலைமை நிா்வாக அலுவலா் ஷிவ்குமாா், மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநா் டாக்டா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உறுப்பு தானமளித்தவரின் குடும்பத்தினரை கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT