தமிழ்நாடு

பணி நிரந்தரக் கோரிக்கை: டயாலிசிஸ் நுட்பனா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசு டயாலிசிஸ் நுட்பனா்கள் (டெக்னீஷியன்) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற அந்த ஆா்ப்பாட்டத்தில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கம், தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னிசியன்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, அதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கடந்த ஆண்டு 160 டயாலிசிஸ் நுட்பனா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். அவா்களின் ஓராண்டு ஒப்பந்தப் பணி கடந்த 23-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், அவா்களை முதல்வா் மருத்துவக் காப்பீடு மூலம் அயல் சேவை (அவுட் சோா்சிங்) முறைக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவா்கள் அரசின் நேரடி ஒப்பந்தப் பணியிலிருந்து தனியாா் முகமைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

அதுமட்டுமல்லாது அவா்களின் மாதத் தொகுப்பூதியமும் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும். கரோனா காலக்கட்டத்திலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்த அவா்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பும், பணி நிரந்தரமும் வழங்க வேண்டும். டயாலிசிஸ் நுட்பனா்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT