தமிழ்நாடு

தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு!

DIN

சேலம்: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதுடன், போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என்று  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

எடப்பாடி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்

அப்போது, தமிழக முதல்வர் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக தமிழகத்தை சீரழித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அதனால் சில விளக்கங்களை கொடுப்பதாக தெரிவித்தார்.

அதன்படி, அகல பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றதாகவும், சட்ட ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், தற்போது தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடந்த வண்ணம் சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லாத தமிழகமாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 பேர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருள் விற்பதாக கண்டறிக்கப்பட்ட நிலையில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது ஏன்? மற்றவர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளுங்கட்சியின் பின்னணி உள்ளவர்கள் அவர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் ராமநாதபுரத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டறிக்கப்பட்டது என்றும், இந்த விஷயத்தில் திமுக நிர்வாகி பின்னணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் வயிறு எரிவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் மற்றவர்கள் வயிறு எரியவில்லை மக்கள் வயிறுதான் தான் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு தமிழகம் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியை பழிவாங்குவதை கைவிட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பழனிசாமி, பத்திரிகை மற்றும் ஊடகங்கள்  மூலம் வந்த செய்திகள் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால். அதுபற்றி யோசிக்காமல் தனது குடும்ப நினைவுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் முதல்வர் நாட்டு மக்களின் நிலைமையை பற்றி பேச நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார் 

கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக நல்ல திட்டங்களான மடிக்கணினி வழங்க திட்டம், தாலிக்கு வழங்கும் திட்டத்தை திமுக தலைமையின் அரசு முடக்கியது என்றும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முடக்கியதுதான் தமிழக அரசின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பினர்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாடுகள் மக்களுக்காக செய்து கொடுத்திருப்பதாகவும் அதை தான் பட்டியலிட்டு பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார். அதேசமயம் கடந்த 19 மாத கால ஆட்சியில் நீங்கள் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?, அதனால் மக்கள் அடைத்த பயன் என்ன? என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இதற்கு மக்கள் தீர்ப்பளிக்கட்டும் என்றும் அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT