தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகம்

30th Nov 2022 10:28 AM

ADVERTISEMENT


பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி முருகன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க.. கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை- மதுரைக் கிளை உத்தரவு

படியேறி வரும் பக்தர்கள், கோயிலுக்குள் வரும் போது சுக்கு காபி கொடுக்கும் திட்டம் குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்துக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

மலையில் அமைந்திருக்கும் பழனி முருகன் கோயிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் மற்றும் வின்ச் ரயில் மூலம் பக்தர்கள் சென்று வரலாம்.
 

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT