தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மட்டும் ரத்து!

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்  மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 

டெண்டா் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் வேலுமணி தொடா்ந்த வழக்குகளின் தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டா் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து தொடர்ந்து விசாரிக்கலாம் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT