தமிழ்நாடு

ஊராட்சி பணியாளரின் காலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு: அடுத்து நடந்தது என்ன?

30th Nov 2022 03:04 PM

ADVERTISEMENT


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் ஊராட்சி பணியாளரின் காலை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பினை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசித்து வருவபர் சங்கர். இவரது வீட்டின் அருகே சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது, அதனை விரட்ட சென்ற போது சங்கரின் கால்களை மலைப்பாம்பு சுற்றுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க |  கரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு பொறுப்பேற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது என்ன?

இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

ADVERTISEMENT

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சங்கரின் காலை சுற்றி இருந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை மீட்டு  வனப்பகுதிக்குள் விட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT