தமிழ்நாடு

மணக்குள விநாயகர் கோயில் லட்சுமி யானை மறைவு: தமிழிசை இரங்கல்

30th Nov 2022 03:25 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பிரசித்தி  பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (33) புதன்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து இறந்தது. லட்சுமி இறந்தது புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

லட்சுமி யானையின் ஆசிர்வாதத்துக்காக தமிழிசை சௌந்தரராஜன்

இதுதொடர்பாக மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி யானை தனக்கு ஆசிர்வாதம் வழங்கிய சில புகைப்படங்களை பகிரிந்து இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீர் மரணம்!

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது புதுச்சேரியில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை புதன்கிழமை இல்லை என்று நினைத்து வருந்துகிறேன்.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆசி வழங்கும் லட்சுமி யானை

மணக்குள விநாயகர் திருக்கோயிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை.

லட்சுமி யானைக்கு பழங்களை அளிக்கும் தமிழிசை சௌந்தரராஜன்

லட்சுமி யானையை இழந்து வாடும் புதுச்சேரி மக்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து அன்போடு அவளிடம் பழகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT