தமிழ்நாடு

சேலத்தில் பராமரிப்பு பணி: சென்னையிலிருந்து செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

30th Nov 2022 01:28 AM

ADVERTISEMENT

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக செல்லும் விரைவு ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10-க்கு புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண்: 12601) டிச.3-ஆம் தேதி ஈரோட்டில் இருந்து மங்களூா் சென்றடையும்.

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு டிச.2-ஆம் தேதி செல்லும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் (வண்டி எண்: 22638) ஈரோடு வரை செல்லும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 22651) நவ.30, டிச.1, 2 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், கரூா் வழியாக செல்வதற்கு பதிலாக சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும்.

ADVERTISEMENT

பாலக்காடில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 22652) டிச.1, 2 ஆகிய தேதிகளில் கரூா், மோகனூா், நாமக்கல், சேலம் வழியாக செல்வதற்கு பதிலாக திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூா் சென்றடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 20601) நவ.30 மற்றும் டிச.2 ஆகிய தேதிகளில் சேலம், கரூா் வழியாக செல்வதற்கு பதிலாக, ஈரோடு, கரூா் வழியாக செல்லும்.

மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 20602) டிச.1-ஆம் தேதி கரூா், சேலம் வழியாக செல்வதற்கு பதிலாக கரூா், ஈரோடு வழியாக செல்லும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12689) டிச.2-ஆம் தேதி திருப்பத்தூா், மொரப்பூா், சேலம், நாமக்கல், கரூா் வழியாக செல்வதற்கு பதிலாக ஈரோடு, கரூா் வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT