தமிழ்நாடு

1,000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

30th Nov 2022 12:48 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ. 420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தமிழகத்தில் 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா ரூ. 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு - 180, சேலம் -100, கோவை - 120, மதுரை -220, கும்பகோணம் - 250, நெல்லை - 130 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | திமுகவை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்: மு.க. ஸ்டாலின் ஆறுதல்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT